நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கவசம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக நடித்த அந்த படத்தில் மெஹரீன் பிர்சாதாவும் இன்னொரு கதாநாயகியாக நடித்திருந்தார். சாய் ஸ்ரீனிவாஸ் காவல்துறை அதிகாரியாக நடித்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்தார்.

Image result for kajal chota kiss

இந்த படம் வெளியாகி பெயர் பெறவில்லை என்றாலும் இந்த படத்தின் ஆடியோ லாஞ்சில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பானது. காஜல் அகர்வால் ஆடியோ விழாவில் பேசி கொண்டிருக்கையில் படத்தின் கேமராமேன் சோட்டா நாயுடு திடீரென காஜலின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டார்.

Image result for kajal chota kiss

சமீபத்தில் அதனை பற்றி மனம் திறந்துள்ள காஜல், "முதலில் சோட்டா முத்தமிட்ட போது அதிர்ச்சியாக தான் இருந்தது, ஆனால் அவரை எனக்கு ஒரு குடும்ப நண்பர் போல பல ஆண்டுகளாக தெரியும், மேலும் மேடையை விட்டு இறங்கிய போதே தான் செய்தது தவறாக இருந்தால் மன்னித்து கொள், தவறான எண்ணத்தில் முத்தமிடவில்லை என்று சோட்டா கூறினார்" என்றார். மேலும் இது பற்றி சோட்டா பேசுகையில் காஜல் தன்னை பற்றி நல்ல வார்த்தைகள் கூறியதால் அதன் பொருட்டே பாசத்தில் முத்தமிட்டதாக கூறியுள்ளார்.  


మరింత సమాచారం తెలుసుకోండి: