தல அஜித் கடைசியாக சிவா இயக்கத்தில் பிளாக்பஸ்டர் படமான விசுவாசம் படத்தில் நடித்தார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, அனிகா சுரேந்திரன், ஜெகபதி பாபு மற்றும் யோகி பாபு  உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கிட்டத்தட்ட இருநூறு கோடி வசூல் செய்து தலையின் கேரியரில் மாபெரும் வெற்றி படமாக திகழ்கிறது.

Image result for ner konda paarvai

இந்நிலையில் அடுத்ததாக ஹிந்தியில் தாப்ஸீ மற்றும் அமிதாப் பச்சன் நடித்த படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர் கொண்ட பார்வை படத்தில்  தல அமிதாப் நடித்த வேடத்திலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் டாப்சீ வேடத்திலும் நடித்து வருகின்றனர்.

Image result for ner konda paarvai

முதலில் படம் தல பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி வருவதாக இருந்தது. ஆனால் இப்பொழுது தொடர்ச்சியாக ஏப்ரல் இறுதிவரை ஷூட் உள்ளது என்று அதிகாரபூர்வமாக கூறப்பட்டதால் அந்த தேதியில் வெளியாகாதது என்று தெரிகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: