நடிகை அமலா பால் கவர்ச்சியாக ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் ஐந்தாவது முறையாக ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்க ஜெகதீஸ்வர ரெட்டி என்பவர் கிளம்பி உள்ளார். இவர் ஜெயலலிதாவின் விசுவாசி என்று கூறிக்கொள்கிறார்.


இந்த படத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் நட்பை பற்றி கூற உள்ளதால் படத்திற்கு சசி லலிதா என்று பெயரிட்டுள்ளார்.


இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கஜோல் மற்றும் சசிகலா வேடத்தில் அமலா பாலை நடிக்க வைக்க இயக்குனார் முயற்சி செய்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார்கள். 



మరింత సమాచారం తెలుసుకోండి: