நடிகை ஜோதிகா,  சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் வந்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. 



இந்த படத்திற்கு 'ஜாக்பாட்' என்ற பெயர் வைக்கப்பட்டு  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஜோதிகாவும் ரேவதியும் போலீஸ் உடையில் இருப்பதால் இவர்கள் இருவரும் திருட்டுத்தனம் செய்யும் காவல்துறை அதிகாரிகளாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. 



ஜோதிகா  'நாச்சியார்' படத்தில் பாலா இயக்கத்தில் இதற்கு முன்னர் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார். யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ்  நடித்துள்ள இந்த படம் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: