நடிகர் சூர்யா தன்னை வைத்து அயன் என்ற மாபெரும் பிளாக்பஸ்டர் படத்தையும், மாற்றான் என்ற ஆவரேஜ் படத்தையும் கொடுத்த ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர் கேவி.அனந்துடன் மூன்றாம் முறையாக இணைந்துள்ள படம் தான் காப்பான். அரசியல் மற்றும் தீவிரவாதம் கலந்த ஒரு தேசபக்தி படமாக காப்பான் உருவாகியுள்ளது.



இதில் சூரியா என்.எஸ்,ஜி கமேண்டோவாக நடித்துள்ளார், பல்வேறு கெட்டப்களில்  வருவார் என்று கூறப்படுகிறது. ரியல் ஜோடி ஆர்யா மற்றும் சாயிஷாவும் நடித்துள்ளனர்.



மலையாள லெஜண்ட் மோகன்லால் இந்திய பிரதமர் சந்திரகாந்த் வர்மா என்ற வேடத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்டு மாதம் முப்பதாம் தேதி திரைக்கு வரும் என்று லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: