நடிகை டாப்சீ பன்னு தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 , என சில படங்களில் நடித்திருந்தார். தெலுங்கிலும் மிஸ்டர் பெர்பெக்ட், வீரா, ஷாடோ, ஆனந்தோ பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும் பெரும்பாலும் கவர்ச்சிக்கு தான் அவரை பயன்படுத்தினார்கள்.

Related image

ஆனால் அவர் பாலிவுட்டிற்கு சென்று  இன்று பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். பிங்க் படத்தை அடுத்ததாக அவர் நடித்த முல்க், நாம் ஷபானா, மணமர்சியான், சூர்மா, பத்லா ஆகிய படங்கள் அவரை வேறு லெவலுக்கு இழுத்து சென்றுள்ளன. இதனை அடுத்ததாக அவர் மீண்டும் தமிழுக்கு ரீ என்ட்ரி ஆகவுள்ள படம் தான் கேம் ஓவர்.

Image result for taapsee apherald

இதற்கும் அடுத்ததாக இனொரு படத்திலும் தமிழில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படம் தான் ஜெயம் ரவி நடிக்க, வாமனன், என்றென்றும் புன்னகை புகழ் அஹமது இயக்கத்தில் உருவாகவுள்ள படம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: