மாநகரம் படத்தில் பிரபலமான  இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் கார்த்தி நடித்து வரும் கைதி படத்தினை இயக்கி முடித்து விட்டார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் பிசியாக இருக்கும்  லோகேஷ், அடுத்ததாக விஜய் நடிக்க ஒரு படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதனை அடுத்ததாக  நடிகர் சூர்யாவை வைத்து  ஒரு ஃபேண்டசி கதையை லோகேஷ் கனகராஜ் சொல்லி ஓகே பண்ணிவிட்டதாக  கூறப்படுகிறது,

Image result for surya kajal apherald

மேலும் இது இரும்புக்கை மாயாவி சூப்பர்ஹீரோ கதாபாத்திரம் போன்ற கதை என்றும் சொல்ல படுகிறது.விஜய் படத்தை முடித்த பிற்பாடு சூர்யா படத்தை அவர் இயக்க வாய்ப்புள்ளது.


சூர்யா நடிப்பில் என்.ஜி.கே, காப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்களும்  வெளியாகவுள்ள நிலையில் சூர்யா தற்பொழுது  சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்ததாக  ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: