நடிகர் கார்த்தயின் கைதி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்  பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அவர் இப்பொழுது  ஜீது  ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா, சத்யராஜூடன் இணைந்து ஒரு குடும்ப த்ரில்லர்  படத்தில் நடித்து வருகிறார்.

Image result for karthi kajal

இதனையடுத்து ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரெமோ படத்தை எடுத்த  பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்,

Image result for karthi kajal

இந்த படத்தில் கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா அறிமுகமாகவுள்ளார், இதன் பூஜையும் போடப்பட்டது.இந்நிலையில் சமீபத்தில் வெளியான  ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேலுடன் இணைந்து  கார்த்தி ஒரு படம் பண்ணப்போவதாக திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது, இதனை பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: