தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய மாரி 2  படம் 2018 டிசம்பர்  21ஆம் தேதி வெளியானது. இந்த படம்  வெற்றியை பெறவில்லை என்றாலும்  ரெளடி பேபி பாடல் யூடியூபில்  பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை புரிந்து வந்தது. யுவன்ஷங்கர் ராஜா  இசையில் இந்த பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

Image result for rowdy baby apherald

தென்னிந்திய மொழி  பாடல் முதல்முறையாக 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. தனுஷின் வொண்டர்பார்  நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில்,  சாதனை ஏற்படுத்த காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Image result for rowdy baby apherald

இந்த பாடல் வெளியான 16 நாளில் 100 மில்லியன் பார்வையாளர்களையும், 41 நாளில் 200 மில்லியன், 69 நாளில் 300 மில்லியன்,157 நாளில் 500 மில்லியன் பார்வையாளர்களை  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: