Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Thu, Oct 17, 2019 | Last Updated 11:06 pm IST

Menu &Sections

Search

SJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்

SJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்
SJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
தன்னுள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் SJ சூர்யா. சமீபத்தில் 'மான்ஸ்டர்' என்று மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. SJ சூர்யா என்றாலே ரொமான்ஸ் ஆன ஆள் என்ற பெயர் மாறி, நம்முள் உலவும் ஒரு சாதாரண மனிதனை அழகாக பிரதிபலித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியாபவானி ஷங்கர் நடித்திருக்க, 'மான்ஸ்டர்' படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்  இயக்கியிருந்தார். இப்படம் மே மாதம் வெளியாகி  இந்த ஆண்டில் மிக நல்ல வசூலை ஈட்டியது.
'வாலி' மூலம் இயக்குநராக அறிமுகமாகிய SJ சூர்யா 'நியூ' மூலம் ஹிரோவனார். மெர்சலில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியவர். இறைவி படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
SJ Suriya

இப்போது 'மான்ஸ்டர்' மூலம் அனைவரும் கொண்டாடும் குடும்ப நாயகனாக மாறியிருப்பவர் தன் அடுத்த பயணத்தை தமிழின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராதாமோகனுடன் ஆரம்பித்துள்ளார். இயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தினை  ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH  LLP) சார்பில் தயாரித்து, நடிக்கவிருக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான  வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக  இந்தப் படத்தை இயக்கப் போகிறார். சமீபகாலமாக  மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் SJ சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதர்ஷமான  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  ‘கோமாளி’ ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘நேர்கொண்டபார்வை’  கலை இயக்குனர்,இப்படத்திற்கும் பணியாற்ற உள்ளார். படக்குழுவினர் கலந்துக்கொள்ள  மிக எளிய முறையில் இப்படத்தின் அலுவலக பூஜை இன்று நடைப்பெற்றது. சென்னையில் வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ராதா மோகன், SJ சூர்யா,யுவன் ஷங்கர் ராஜா இணையும் இந்த பிரமாண்ட கூட்டணி 2020  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
தற்போது SJ சூர்யா 'உயர்ந்த மனிதன்' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 'இரவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன.


SJ Suriya's next rolling out
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
தமிழின் பெருமை சொல்லும் “ழ” பாடல் !
இளம் நடிகையின் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் சீனியர் நடிகைகள்
இறுதிக்கட்டத்தில் “தனுஷு ராசி நேயர்களே” !
ஸ்ருதிஹாசன் கொடுத்த பரிசு
'அன்புள்ள கில்லி' படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்
அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது.. அருகில் அத்திவரதர்
பிறந்த நாளில் ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் தரண் !
ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ்
காவியன்னமான கதையோடு களம் இறங்க தயாராக இருக்கிறது
நயனுக்கு மச்சம் மாறிப் போச்சே
விமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் "சோழ நாட்டான்" படத்தில் பிரபல தெலுங்கு நடிகை "கார்ரொன்யா கேத்ரின்"
சமந்தா வீட்ல விஷேசங்க
SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது
மலையாளக்கரையோரம் ஒதுங்கிய ஓவியா
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional