Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Fri, Oct 18, 2019 | Last Updated 11:53 pm IST

Menu &Sections

Search

அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’

அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’
அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
சென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 1000 எபிசொடுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த கலை-கற்பனை நயமிக்க தயாரிப்பாளரான வினோத் ஜெயின், முதல் முறையாக திரைப்படத் துறையில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறார்.
Newcomer Filmmaker

இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான்.  அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.  



இப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம். வீ பன்னீர்செல்வம் கதை, திரைகதை, ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன், அடையார் திரைப்பட கல்லூரியில் டிஎஃப்டி பயின்றவர், பல விளம்பரப் படங்களை இயக்கி,இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார். சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன்& எஸ் ராஜாமோகன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் அருமையான காட்சியமைப்புகளுடன் உருவாகியிருக்கும் ‘மிருகா’ வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.


Newcomer Filmmaker's Miruga to hit screens soon
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்
யாஷிகா,ஐஸ்வர்யா சேர்ந்து நடிப்பார்களா?
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
தர்பார் மோஷன் போஸ்டர் அறிவித்த அனிருத்!
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
வித்யாபாலன் ஃபேவரைட் படம்!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
சரவணனை சந்தித்த சாண்டி, கவின்!
100 வருடத்தில் இல்லாத மழை!
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை ஏற்று செகண்ட்லுக்!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
தமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி!
அவசரப்பட்ட ராஷ்மிகா...
வடிவேலு கேரக்டரில் யோகிபாபு!
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional