Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Fri, Oct 18, 2019 | Last Updated 11:57 pm IST

Menu &Sections

Search

“இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது” - அதிர்ச்சி தந்த ஆரி

“இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது” - அதிர்ச்சி தந்த ஆரி
“இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது” - அதிர்ச்சி தந்த ஆரி
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
நடிகர் ஆரி பேசும்போது, “இதுபோன்ற பட விழாக்களில் இருக்கும் கலகலப்பு கூட தற்போது வரும் பல படங்களில் இருப்பதில்லை என்பதே உண்மை. ‘உங்கள போடணும் சார்’ என்கிற படம் எல்லாம் வரும்போது, ‘வீராபுரம் 22௦’ என்கிற மண்ணின் பிரச்சனையை, மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ள இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இங்கே படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது, அதிலும் குறிப்பாக சின்ன படங்களுக்கு மாலைக்காட்சி கிடைப்பது என்றால் மிக கஷ்டமான ஒன்று. பெரிய தயாரிப்பாளர்கள், பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேரும்போது சினிமா நன்றாக இருக்காது.. சிறிய தயாரிப்பாளர்களிடம், உழைப்பவர்களிடம் பணம் சென்று சேரும்போதுதான் இந்த இடத்தில் ஒரு வளர்ச்சி இருக்க முடியும்.
Small budget Movies may evade: Actor Aari

தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை கொண்டு வருவதாக அரசு அறிவித்திருக்கிறது. அப்படி செய்யும்போதுதான் வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.. நடிகர்கள் சம்பளம் பற்றி பல காலமாக பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லா நடிகர்களும் தங்களது சம்பளத்தை வெளிப்படையாக சொல்லி வாங்கிக்கொள்ள நினைக்கவேண்டும்.. நான் அப்படித்தான்.. என்னுடைய தயாரிப்பாளர்கள் என்னுடைய படத்திற்கு என்ன வியாபாரமோ அதற்கான சம்பளத்தை கொடுங்கள் என வெளிப்படையாகவே கூறி விடுகிறேன்.எனது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், இன்னும் 5 வருடங்களில் இந்த சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கும் முயற்சிகள் வெகுவாக குறைந்துவிடும்.. சினிமா இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டதால் வீட்டிலிருந்தபடியே அமேசான், நெட்பிளிக்ஸ ஆகியவற்றின் மூலம் குறைந்த கட்டணத்தில் வீட்டிலேயே ஒரு தியேட்டர் உருவாகும் சூழல் வந்துவிட்டது. இந்த மாதிரியான  வியாபார முறைகளால் சினிமா வளமாகத்தான் இருக்கும்.. ஆனாலும் அதன் பலன்கள் தயாரிப்பாளருக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை.. அதனால் அடுத்து நல்ல கதையை, புதிய கதைக்களங்களை, இன்றைக்குள்ள பிரச்சனைகளை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும்.. வழக்கமான பார்முலாவிலேயே படமெடுத்தால் இனிவரும் நாட்களில் அது ஓடுமா என்பது கேள்விக்குறிதான். இப்போது வெப் சீரிஸ்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. பல இயக்குநர்கள் அதை தேடி செல்கின்றார்கள். அதனால் வரும் நாட்களில் தியேட்டர்கள் இருந்தாலும் தியேட்டர்களை மட்டுமே நம்பி படம் எடுக்கும் சூழல் மாறும்.. இதனை தியேட்டர் அதிபர்களும் உணரவேண்டும்’ என்றார்.


Small budget Movies may evade: Actor Aari
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்
யாஷிகா,ஐஸ்வர்யா சேர்ந்து நடிப்பார்களா?
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
தர்பார் மோஷன் போஸ்டர் அறிவித்த அனிருத்!
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
வித்யாபாலன் ஃபேவரைட் படம்!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
சரவணனை சந்தித்த சாண்டி, கவின்!
100 வருடத்தில் இல்லாத மழை!
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை ஏற்று செகண்ட்லுக்!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
தமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி!
அவசரப்பட்ட ராஷ்மிகா...
வடிவேலு கேரக்டரில் யோகிபாபு!
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional