அறிகுறி இல்லாமல் கொரோனா நோய் பரவிவருவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அளித்த பேட்டியின்போது, 144 தடையுத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என நிருபர்கள் கேட்டனர். அப்போது பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, இந்த நோய் பரவுவதற்கு காரணம் கூட்டமாக சேருவதுதான். நாம் தனிமைப்படுத்திக் கொண்டால்தான் இந்த நோய் பரவாது. தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்ளுவது மட்டுமே.  

 

இந்தத் தொற்று நோய் எளிதாக பரவக்கூடியது. வீடியோக்கள் மூலமாக நாம் மக்களுக்கு இதைப்பற்றி காட்டிக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் 7 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலே, பல நோயாளிகளுக்கு பாசிடிவ் வந்துள்ளது. எனவே மக்கள் விலகியிருக்க வேண்டும். விலகியிருப்பதுதான் இந்த நோய் பரவாமல் தடுக்க ஒரே வழி. அரசு உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. மக்களுக்கு நோய் பரவக் கூடாது என்றுதான் நினைக்கிறோம். அரசு ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது என்றால் அது மக்கள் நலனுக்காக தான். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசு சட்டம் போடும், அதை கடைபிடிக்க வேண்டியது மக்கள் தான் என்றார். சூசகமாக 144 தடையுத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதை இவ்வாறு அவர் கூறினார். அறிகுறி இல்லாமல் கொரோனா நோய் பரவிவருவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அளித்த பேட்டியின்போது, 144 தடையுத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என நிருபர்கள் கேட்டனர். அப்போது பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, இந்த நோய் பரவுவதற்கு காரணம் கூட்டமாக சேருவதுதான். நாம் தனிமைப்படுத்திக் கொண்டால்தான் இந்த நோய் பரவாது. தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்ளுவது மட்டுமே.  

 

இந்தத் தொற்று நோய் எளிதாக பரவக்கூடியது. வீடியோக்கள் மூலமாக நாம் மக்களுக்கு இதைப்பற்றி காட்டிக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் 7 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலே, பல நோயாளிகளுக்கு பாசிடிவ் வந்துள்ளது. எனவே மக்கள் விலகியிருக்க வேண்டும். விலகியிருப்பதுதான் இந்த நோய் பரவாமல் தடுக்க ஒரே வழி. அரசு உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. மக்களுக்கு நோய் பரவக் கூடாது என்றுதான் நினைக்கிறோம். அரசு ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது என்றால் அது மக்கள் நலனுக்காக தான். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசு சட்டம் போடும், அதை கடைபிடிக்க வேண்டியது மக்கள் தான் என்றார். சூசகமாக 144 தடையுத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதை இவ்வாறு அவர் கூறினார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: