கொரோனா தடுப்பு பணிகளை நாடு முழுக்க மேற்கொள்ளும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முப்படை மரியாதை இன்று நடந்தது. இதற்கான விமானப்படை ஹெலிகாப்டர்கள் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவியது. நாடு முழுக்க பல்வேறு இடங்களில் முப்படை மரியாதை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுக்க கொரோனாவிற்கு எதிராக மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் கடுமையாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது கொரோனாவை தடுக்கும் பொருட்டு தீவிரமாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை நாடு முழுக்க மேற்கொள்ளும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முப்படை மரியாதை இன்று செய்யப்பட உள்ளது. இதற்கான விமானப்படை ஹெலிகாப்டர்கள் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவியது. அதேபோல் விமானப்படை விமானங்கள் நாடு முழுக்க பல்வேறு நகரங்களில் அணிவகுப்பை நடத்தியது. நேற்று முதல்நாள் முப்படை தளபதி பிபின் ராவத் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த பணிகளை செய்வதாக அவர் அறிவித்தார்.

 

இந்த நிகழ்வில் முதற்கட்டமாக டெல்லியில் உள்ள போலீஸ் மெமோரியலில் மலர் வளையம் வைக்கப்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் காவலர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மரியாதை செய்யப்படுகிறது. அதன்படி தற்போது டெல்லியில் போலீஸ் நினைவுச் சின்னம் மீது விமானப் படை ஹெலிகாப்டர்கள் மலர்தூவியது. இதை தொடர்ந்து நாடு முழுக்க பல்வேறு நகரங்களுக்கு மேல் விமானப்படையின் விமானங்கள் மரியாதை அணிவகுப்பு செய்தது. காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்த விமானப்படை அணிவகுப்பு நடக்கிறது. டெல்லியில் இந்த அணிவகுப்பு மழை காரணமாக கொஞ்சம் தாமதமாக நடந்தது.. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து திருவனந்தபுரம், அசாமின் திப்ருகார்க் பகுதியில் இருந்து கட்ச் வரை இந்த விமானங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மேல் பறந்தது. நாடு முழுக்க இருக்கும் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மீது இந்த விமானங்கள் பறந்து சென்று அதன்மீது மலர்களை தூவும். தமிழகத்தில் கோவை மற்றும் சென்னை மீது விமானங்கள் பறந்தது.

మరింత సమాచారం తెలుసుకోండి: