ஐதராபாத்:
துப்பாக்கி படத்தில் விஜய் சொல்லும் ஸ்லீப்பர் செல்ஸ் இதுவரை மக்களுக்கு புதிய விஷயமாகவே இருந்தது. ஆனால் அப்படி இருக்கிறார்கள் என்று தற்போது தெரிய வந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது நடந்துள்ளது தெலுங்கானாவில்தான்.


தெலுங்கானாவில் தான் அதிகளவிலான ஸ்லீப்பர் செல்ஸ் பதுங்கி இருப்பதாக புலனாய்வுத்துறை தற்போது தெரிவித்துள்ளது. இந்த மாநிலத்தின் முக்கிய பகுதிகள் ரவுண்ட் கட்டப்பட ஐதராபாத் மற்றும் கரிம்நகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 90 ஸ்லீப்பர் செல்ஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இத்தனை பேரா என்று புலனாய்வத்துறை அதிகாரிகளே அதிர்ந்து போய் உள்ளனர். இந்த ஸ்லீப்பர் செல்ஸ் பயங்கரவாத செயல்கள் உட்பட பல நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இவர்கள் ஐதராபாத்தில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்த பலமுறை முயன்றுள்ளனர் என்ற தகவலும் தற்போது சேர்ந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  இவர்கள் ஹீஜி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சூழ்நிலையை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற் போல் தாக்குதல்களை நடத்துகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்லீப்பர் செல்களையும் பிடித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


என்னங்க நடக்குது நம்ம நாட்டில்... எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல், நாட்டுக்குள் ஸ்லீப்பர் செல்ஸ்... 


మరింత సమాచారం తెలుసుకోండి: