பெங்களூரு:
எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்ல... ஆனால் விவசாயத்திற்கு தண்ணீர் கேட்கிறீர்களே என்று வருத்தப்பட்டு இருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா... 


கர்நாடகாவில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயத்திற்கு தமிழகம் தண்ணீர் கேட்பது வருத்தமளிக்கிறது என்று சொல்லியுள்ளார். 


காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.


இதற்கு கர்நாடகா தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இதையடுத்து, 'தமிழகத்துக்கு உரிய பங்கை பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்' என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவிக்க, அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் இடைக்கால மனுவை தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து இதுவரை மௌன விரதம் இருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா... காவிரி பிரச்னையை கர்நாடக அரசு சட்டப்படி சந்திக்கும். தமிழகம் விவசாயத்திற்கு காவிரியில் தண்ணீர் கேட்பது வருத்தமளிக்கிறது. கர்நாடகாவில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறார்.


இத்தனை நாள் அமைதியாக இருந்தது இந்த குடிநீர் தட்டுப்பாட்டை கண்டுபிடிக்கத்தானா என்று கேள்வி கேட்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.



మరింత సమాచారం తెలుసుకోండి: