பெங்களூர்:
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அடுத்து... கர்நாடகா விவசாயிகளின் போராட்டம் அதிகரித்துள்ளது. 


இதன் எதிரொலியாக மைசூர், ஓசூர் செல்லும் சாலைகள் வாகன நெரிசலால் திணறி வருகிறது. மைசூரு, மாண்டியா மற்றும் பநீரங்கப்பட்டினா பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டடுள்ளது.


 காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட கர்நாடகா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக இன்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.


ஆனால் இதற்கிடையே கர்நாடகா விவசாயிகளின் போராட்டத்தால் மைசூர் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. திரும்பிய இடம் எல்லாம் போராட்டங்கள் நடந்து வருகிறது. மாண்டியாவில் மட்டும் சுமார் 2,500 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக உள்ளனர்.


மேலும் கர்நாடகா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணராஜ சாகர் அணை, பிருந்தாவன் கார்டன் ஆகியவற்றை 4 நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: