பெங்களூர்:
தமிழகத்திற்கு மேலும் 10 நாட்கள் காவிரி நீர் திறக்க வேண்டும் என்று மேற்பார்வைக்குழு கூறியுள்ள நிலையில் கர்நாடகத்தில் உள்ள ஒரு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டது. 


இதனால் வேறுவழியின்றி தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடக அரசு. தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்தும், உச்ச நீதிமன்ற உத்தரவைக் கண்டித்தும் கர்நாடக மாநிலத்தில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. தமிழர்கள் தாக்கப்பட்டனர்.


இந்நிலையில் நேற்று நடந்த காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 3000 கனஅடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. 


இது கர்நாடகத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் பேசிய திமிர் பேச்சு மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. 

எம்.பி. பாட்டீல்

Image result for எம்.பி. பாட்டீல்


இந்த பரபரப்பான நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: