பெங்களூரு:
செய்வாரா? ராஜினாமா செய்வாரா என்று எதிர்பார்ப்பும், அதனால் ஏற்பட உள்ள பிரச்னைகளையும் நினைத்து கர்நாடக தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர். 


காரணம் என்ன தெரியுங்களா? காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவால் கர்நாடகா அதிர்ந்து போய்தான் உள்ளது. 


இதனால் தனது பதவியை ராஜினாமா செய்ய, கர்நாடக முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட நேற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட சித்தராமையா தனது ராஜினாமா குறித்த அறிவிப்பை இன்று வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


காவிரி நீர் பிரச்னையை அரசியலாக்கி ஆதாயம் பார்க்க நினைக்கின்றனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுக்கும் பட்சத்தில், அது ஆளும் சித்தராமைய்யா தலைமையிலான காங்., அரசுக்கு மக்களிடம் நல்ல மதிப்பை ஏற்படுத்தும்.


அடுத்த ஆண்டு நடக்க உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்.,க்கு கூடுதல் பலத்தை அளிக்கும். கர்நாடக அரசு மறுத்தால், ராணுவ பாதுகாப்புடன் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும். இது கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு மிகப் பெரிய தோல்வியை தரும். இப்படி அரசியலாக்குகின்றனர் காவிரி நீரை. தண்ணீருக்காக தவித்து நிற்கும் தமிழகத்தின் நிலையை எண்ணி பார்க்காத அரசியல்வாதிகளே... இது நியாயமா என்று கேள்வி எழுப்புகின்றனர் நடுநிலையாளர்கள்.


சித்தராமைய்யா தற்போது ராஜினாமா செய்தால் அது அவருக்கும், காங்.,க்கும் கர்நாடக மக்களிடம் நல்ல மதிப்பை ஏற்படுத்தி தரும். காவிரி பிரச்னையின் தீவிரம் குறைவதற்குள் தற்போதைய ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்தினால், அது ஆளும் கட்சிக்கே சாதகமாக அமையும் என சித்தராமைய்யா கணக்கிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாத வன்முறையை சந்தித்தது கர்நாடகா. முதல்வர் ராஜினாமா என்றால் இதை காரணம் காட்டியே மேலும் தமிழர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சமும் கர்நாடக தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: