கொழும்பு:
திறமைக்கும், நுணுக்கத்திற்கும் எடுத்துக்காட்டு இதுதான் என்று சிங்கள மக்களே வியக்கின்றனர். எதை பார்த்து தெரியுங்களா? 


இலங்கையில் கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அப்போது விடுதலைப் புலிகளிடம் இருந்து போர் தளவாட கருவிகள் கைப்பற்றப்பட்டன. இங்குதான் இருக்கிறது விஷயமே.


இந்நிலையில் முல்லைத் தீவு மந்துவில் ராணுவ கண்காட்சி அமைக்கப்பட்டது. இதில் இலங்கை ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளும், விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போர் தளவாடங்களும் இடம் பெற்றுள்ளன. இலங்கை ராணுவத்தினரை விட விடுதலைப்புலிகள் தொழிற்நுட்பத்தில் சிறந்து விளங்கியது தெரிய வந்துள்ளது. 


இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தளவாடங்களில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகள் முயற்சியால் தயாரிக்கப்பட்டவையே என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சியை காண அதிக அளவில் சிங்கள மக்கள் வருகின்றனர். இவர்கள் போரின்போது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய போர்க் கருவிகளை பார்த்து வியப்படைகின்றனர்.


பெருமிதத்தோடு விடுதலைப்புலிகளின் தொழில் நுட்பத்திறன் பற்றி வியக்கின்றனர். இந்த கண்காட்சியில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய 2 ஆயிரம் ஏவுகணைகள், அவற்றை செலுத்தும் கருவிகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.


మరింత సమాచారం తెలుసుకోండి: