ஐதராபாத்:
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது. இந்த மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.


வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை கனமழை மிரட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதால் வீடுகள்ம் நீரில் மூழ்கி உள்ளன. அடுத்த 36 மணி நேரத்துக்கு இந்த பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது வேறு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்நிலையில் கனமழைக்கு இரண்டு மாநிலங்களிலும் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.


ஐதராபாத் நகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதால் ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.


மழையால் மோசமாக பாதிப்படைந்துள்ள சில பகுதிகளில் மீட்பு பணிக்கு ராணுவத்தின் உதவியை அரசு கேட்டுள்ளது. இந்த மழை வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெருமளவில் இடையூறு ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: