புதுடில்லி:
குட்டு நங்கென்று விழுமா... இல்ல இன்னும் அழுத்தமாக விழுமா என்று தெரியாததால் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டு காத்திருக்கிறது கர்நாடகா. எதற்காக தெரியுங்களா?


உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடாததால் கோர்ட்டின் நடவடிக்கை எப்படி பாயும் என்பதால்தான் கதிகலங்கி போய் உள்ளது கர்நாடகா.


தமிழகத்துக்கு 21-ந்தேதி முதல் 27-ம் தேதி வரை 6,000 கன அடி நீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என கடந்த 20-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


ஆனால் காவிரி நீரை கர்நாடகா திறந்து விடவில்லை. கடந்த 23-ந் தேதி சட்டசபையை அவசரமாக கூட்டிய கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது.


என்னன்னு தெரியங்களா? காவிரி நீர் கர்நாடகாவின் குடிநீருக்கு மட்டுமே. தமிழகத்தின் பாசனத்துக்கு திறந்துவிட இயலாது என்று. இதற்கு மாநில ஆளுநர் வாஜீபாய் வாலா ஒப்புதல் அளிக்க, மத்திய நீர் வளத்துறை, சட்டத்துறை மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் சித்தராமையா அரசியல் சாசன சிக்கலை ஏற்படுத்த முயற்சிக்கிறார். நீதித்துறைக்கும் அரசியலமைப்புக்கும் இடையே மோதலை ஏற்படுத்தவே இந்த தீர்மானம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


இந்நிலையில்தான் நேற்று கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. குடிநீருக்கே தண்ணீர் இல்லை; ஆகையால் டிசம்பர் மாதம் தரும் நீரோடு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுகிறோம் என்று. 


உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படுகிறது கர்நாடகா. காவிரி நீரை திறக்கும்வரை கர்நாடக அரசின் மனு மீது விசாரணை நடத்தக் கூடாது என்று தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தில் இன்று காவிரி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடகாவை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டிக்கக் கூடும் என்று தெரிகிறது. இதனால் கதிகலங்கி போய் உள்ளது கர்நாடகா அரசு.


మరింత సమాచారం తెలుసుకోండి: