துபாய்:
பரபரப்பான... சுறுசுறுப்பான துபாய் விமான நிலையத்தை இழுத்து மூட வைத்தது ஆளில்லா விமானம் ஒன்று. 


உலகின் மிகவும் சுறுசுறுப்பான துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இன்று காலை ஆளில்லா மர்ம விமானம் ஒன்று பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இது ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் அரை மணி நேரத்துக்கு விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.


சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாள்வதன் மூலம் உலகின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் உள்ளது. 


இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 8 மணியளவில் துபாய் விமான நிலையத்தை ஒட்டியுள்ள வான்எல்லையில் ஆளில்லா மர்ம விமானம் ஒன்று சுற்றிச்சுற்றி வந்து வட்டமிட்டது இதனால் பெரும் பரபரப்பு உருவானது. இதுகுறித்த அறிந்த விமான நிலைய அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.


இதையடுத்து துபாய் விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி கேட்டிருந்த விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. புறப்பட்டு செல்ல வேண்டிய சில விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் அரை மணி நேரத்துக்கு மூடப்பட்டது.


பின்னர், அரை மணிநேரம் கழித்து அந்த விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. துபாய் நாட்டில் விமான நிலையங்களுக்குட்பட்ட சுமார் 5 கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் தனியாருக்கு சொந்தமான ஆளில்லா விமானங்களை பறக்க விடக்கூடாது. லேசர் ஒளியை பாய்ச்சுவது, கேமராக்களால் படம் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று துபாய் அரசு கடும் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த ஆளில்லா விமானம் பெரும் பதற்றத்தைதான் உருவாக்கி விட்டது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: