பீஜிங்:
நெருப்புடா... விளையாடதேடா என்று ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா. எதற்காக தெரியுங்களா?


தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. 


அட நாங்களும் இருக்கோம் பிரதர் என்று சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரி வந்தன. இந்நிலையில் சர்வதேச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில்  தென் சீனக்கடல் பகுதியில் சீனாவிற்கு உரிமை இல்லை என்று தீர்ப்பளித்தது.


ஆனால் இதை ஏற்க மறுத்து முரண்டு பிடித்து வரும் சீனா... தொடர்ந்து அந்த பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகிறது. 


இந்நிலையில் தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடலாம் என்று ஜப்பான் அறிவித்த்துள்ளது. இதனால் தென் சீனக் கடல் விவகாரத்தில், நெருப்புடன் விளையாடாதீர்கள் என்று ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: