சென்னை:
இன்னும் ஒரு மாதத்திற்கு சென்னையில் ஆதார் அட்டையை ‘ஸ்கேனிங்’ செய்வதற்கான வாய்ப்பு நீட்டிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் சொல்லியிருக்காங்க... 


பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடும்ப அட்டைகளின் காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. புதிய ரே‌ஷன் கார்டை ஸ்மார்ட் கார்டு வடிவில் கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.


இத்திட்டத்தை 2017 ஜனவரி மாதம் முதல் செயல்படுத்த அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் விவரங்கள், செல்போன் எண் போன்றவை பதிவு செய்யப்பட்டு வருகிறது.


பெரும்பாலான மாவட்டங்களில் இந்த பணி நிறைவடைந்துவிட்டது. ஆனால் சென்னையில் 2000 ரே‌ஷன் கடைகளில் ஆதார் அட்டை ‘ஸ்கேனிங்’ செய்யும் பணி இந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது. 


சென்னையில் சுமார் 20 லட்சம் ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் 8 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே ஆதார் அட்டையை ரே‌ஷன் கடைக்கு சென்று பதிவு செய்துள்ளனர்.


இதனால் ஆதார் அட்டையை ‘ஸ்கேனிங்’ செய்வதற்கான வாய்ப்பு மேலும் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை பதிவு செய்யாதவர்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்


మరింత సమాచారం తెలుసుకోండి: