அரவக்குறிச்சியில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் நாதுராம் கோட்ஸே தான் சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று கமல் பேசிய கருத்து சர்ச்சையாகி, பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இரண்டு நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் நிறுத்தி வைத்திருந்த  கமல்ஹாசன் நேற்று மீண்டும் திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் தொடங்கினார். இதன் பின்னர் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு மதுரையில்  கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார்.

Related image


நேற்றிரவு திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியபோது  இந்து தீவிரவாதம் பற்றி கூறியது  சரித்திர உண்மை , உண்மை கசக்கத்தான் செய்யும், தீவிர அரசியலில் இறங்கி விட்ட காரணத்தால் என்னுடைய பேச்சும் தீவிரமாக இருக்கும் என்று  கூறிய போது யாரும் எதிர்பாரா வண்ணம் திடீரென அவர் மீது  காலணி வீசப்பட்டது.

கூடியிருந்த பலர்  இந்து நாடு, பாரத் மாதாகி  ஜே என்று கோஷமிட்ட வண்ணம், கமல்ஹாசனே வெளியேறு என்றும் கூறினார். பின்னர் அவர்களை  காவல்துறை அதிகாரிகள் கைது செய்து  காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று  11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கமல்ஹாசன்  தன்னை அந்த விரோதி  இந்த விரோதி, இந்து விரோதி என்றெல்லாம் முடிவு கட்டி  விளையாட்டு காட்ட வேண்டாம். மக்களுக்கு தெரியும் நான் யாருக்கு விரோதி என்று, என கூறினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: