தெற்கு காஷ்மீரில் இன்று காலையில் நான்கு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த நால்வரில் முன்பு காவல்துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய ஒருவரும் அடக்கம்.

துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு நால்வரின் உடலும் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் பதுங்கியிருந்த பகுதிகளில் இருந்து ஏகே47 இரக துப்பாக்கிகள் ஏகேஎம் எனப்படும் தானியங்கி துப்பாக்கிகள், மற்றும் சில ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை முதல் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லசிப்போரா எனும் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட நால்வரின் அடையாளங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் இதில் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த முன்னாள் காவலர் தன்னுடைய பணிக்காலத்தில் சட்ட விரோதமாக தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தலைமறைவாகி தீவிரவாத குழுவில் இணைந்து கொண்டார். 

அவர் தலைமறைவான சம்பவம் தெரிவிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் தீவிரவாதிகளுடன் அவரும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேலும் இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் அந்தப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

మరింత సమాచారం తెలుసుకోండి: