பொதுவாக ஆடி மாதம் என்றாலே, அம்மனுக்கு விஷேசமான மாதமாகும். இந்த மாதத்தில் பெண்கள், அம்மனுக்கு கூழ், கொழுக்கட்டை போன்ற அம்மனுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து கும்பிடுவர்.  


இதே போல, ஆடி செவ்வாய் கிழமைகளில், பெண்கள், அவ்வையார் அம்மன் கோவிலில் கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாத பெண்கள் இந்த கோவிலில் ஆடி செவ்வாய் கிழமைகளில் வழிபட்டால், பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.


இந்த அவ்வையார் அம்மன் கோவில், நாகர்கோவில் மாவட்டத்திலுள்ள தாழாகுடி என்ற ஊரின் அருகே உள்ளது. இந்த கோவிலில் அவ்வையார் அம்மன் மட்டுமின்றி கணபதி, முருகன், விஷ்ணு உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன. 


మరింత సమాచారం తెలుసుకోండి: