சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள், இதை சரி செய்ய கரும்பகேசுவரர் கோவில் சென்று வழிபடலாம். இந்த கோயில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு மேற்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும், தஞ்சாவூரில் இருந்து செல்லும் நெடுஞ்சாலையில் தஞ்சாவூருக்கு கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.


சர்க்கரை நோய் இருப்பவர்கள், வெண்ணி கரும்பேசுவரர் கோவிலுக்கு சென்று, வெள்ளை சர்க்கரையும், ரவையும் கலந்து, பிரகாரத்தைச் சுற்றி போட்டு விட்டு. கோவிலை சுற்றி வர வேண்டும். இந்த இனிப்பு கலவையை எறும்புகள் தின்று விடுவதனால், போட்ட சர்க்கரை காணாமல் போனது போல், சர்க்கரை நோயும் காணாமல் போய்விடும் என்பது இந்த ஆலயத்தின் ஐதீகமாக உள்ளது. 


மேலும் இந்த கோவிலில், பெண்கள் அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்வது வழக்கம். வளைகாப்பு நடந்த பெண்கள், தங்கள் பிரசவம் எளிதாக அமைய வேண்டும் என்பதற்காக, அம்மனின் சன்னதிக்கு எதிரே வளையல்கள் கட்டி வழிபடுகின்றனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: