தஞ்சாவூர் மாவட்டத்தில் கூத்தனுர் என்ற கிராமத்தில், சரஸ்வதி தேவிக்கு தனி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் கல்வி செல்வதை வாரி வழங்கும் சரஸ்வதி தேவி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 


இங்கு, நவராத்திரி நாட்களில், மூல நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது, சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சரஸ்வதி பூஜை திருவோணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. 


அன்றைய தினம் சரஸ்வதிக்கு பிடித்தமான பொறி, சர்க்கரை பொங்கல், கடலை, அப்பம் போன்ற பிரசாத வகைகளை படைத்து பூஜிப்பர். அன்றைய தினத்தில், சிறிய  குழந்தைகளுக்கு கல்வி ஏடு தொடங்குவர். 


கல்வி செல்வத்தை வாரி வழங்கும், சரஸ்வதி தேவியை, அன்றைய தினத்தில் வழிபடுவது மிகவும் நன்மை தரும். 


మరింత సమాచారం తెలుసుకోండి: