சென்னை:
தக்காளி... மக்களை கிடுகிடுக்க வைத்து ராக்கெட் வேகத்தில் மேலே எழும்பும்... அட விலையில்தாங்க... அப்புறம் அதள பாதாளத்திற்கும் செல்லும். இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய தக்காளி ஸ்ட்ரோக்... அதாங்க பக்கவாத நோயை வராமல் தடுக்கும் என்று சொல்லியிருக்காங்க....


அது என்ன என்று பார்ப்போமா? பார்ப்போமா?


தக்காளி, சிவப்பு குடமிளகாய், தர்பூசணி சும்மா பிரகாசமாக பளபளன்னு இருக்கே. அதுக்கு காரணம் லைகோபீன் என்ற வேதிப்பொருள்ளதான்.  இந்த லைக்கோபீன்தான் வாதநோயை தடுக்கும் தன்மை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிச்சு இருக்கு.
எப்படி இதை கண்டுபிடிச்சாங்க தெரியுங்களா? 1036 ஆண்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்ற வேதிப்பொருளோட அளவை பர்ஸ்ட் குறிச்சுக்கிட்டாங்களாம்.


லைகோபீன் அளவை வைச்சு 4 தனித்தனி குழுக்களாக பிரித்துள்ளனர். இந்த 4 குழுக்களையும் 12 வருஷமாக தொடர்ந்து கண்காணிக்க ரத்தத்தில் லைகோபீனின் அளவு மிகக்குறைவாக இருந்த குழுவில் 258 பேர் இருந்தனர். இவர்களில் 25 பேருக்கு வாதநோய் தாக்கியது.
ஆனால் லைகோபீனின் அளவு ரத்தத்தில் அதிகம் இருந்த குழுவில் இருந்த 259 பேரில் 11 பேருக்கு மட்டுமே வாதநோய் தாக்கி இருக்கு. இதை வைச்சுதான் லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் வாதநோய் தாக்குவதை 55 சதவீதம் குறைக்கமுடியும் என்று ஆய்வில் சொல்லியிருக்காங்க...


அப்போ...தக்காளி சாப்பிடுங்க... உற்சாகமாக சாப்பிடுங்க... எங்கங்க புறப்பட்டு விட்டீங்க... தக்காளி வாங்கவா...!


మరింత సమాచారం తెలుసుకోండి: