கொல்கத்தா:
புகழ்ப்பெற்ற வங்காள எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான மகாசுவேதா தேவி (90) மாரடைப்பால் காலமானார். 


இவர் 1926-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி டாக்காவில் பிறந்தவர். இவரது தந்தை மனிஷ் கட்டாக்கும் புகழ்பெற்ற கவிஞர். மகாசுவேதா தேவியும் எழுத்தாளராகவே மாறினார். சமூக ஆர்வலராகவும் திகழ்ந்த இவர் மத்தியப் பிரதேசம், பீகார், சண்டிகர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் நலனுக்காக பல போராட்ட களம் கண்டவர்.


சாகித்திய அகாடமி, ஞானபீடம் ஆகிய விருதுகளும், ரமன் மெகசசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, பத்மபநீ விருது, பத்மவிபூஷன் விருது என ஏராளமான விருதுகளை இவர் பெற்றுள்ளார். சமீபகாலமாக உடல்நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த அவர் மாரடைப்பால் காலமானார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: