மாநகரம் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடித்த கைதி பட வாய்ப்பை பெற்றார். கைதி அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் சென்னை போயஸ் இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் சந்தித்த செய்தி வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை முடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ள நிலையில் ரஜினியை லோகேஷ் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் மத்தியில் கதை நாயகனாக தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றிருப்பவர் நடிகர் அப்புக்குட்டி. சிறந்த நடிகராக தேசிய விருது பெற்றவர் மட்டுமல்ல வித்தியாசமான பாத்திரங்களுக்கும் விதிவிலக்கான பாத்திரங்களுக்கும் தன்னை ஒப்படைப்பவர் என்று பெயர் பெற்றவர் .
ஆர்.ஜே.பாலாஜி - JioSaavn இணைந்து வழங்கும் மைண்ட் வாய்ஸ் பாட்காஸ்ட் புதிய பகுதியில், நேயர்களுக்குத் தரப்படும் தவறான தகவல்கள் மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியன குறித்து பல சுவையான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. பிரதி புதன் கிழமை தோறும் JioSaavnல் இடம் பெறும் இந்தப் புதுமையான பாட்காஸ்ட் நிகழ்ச்சி புதிய கோணத்தில் கருத்துக்களை பதிவு செய்கிறது.
ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கதையின் நாயகனாக நடித்து "டம்மி ஜோக்கர் " என்ற திகில் மற்றும் நகைச்சுவை படத்தை தயாரித்துள்ளார் செந்தில்குமார். மேலும் இதில் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி , தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் வெங்கட் பேசியதாவது, "தண்டுபாளையம் ஒரு எக்ஸைட்மெண்டா இருக்குற புரோக்ராமா இருக்கு. பெரியவங்க எல்லாம் வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தண்டுபாளையம் ஒரு சென்ஷேனல் பெயர். தண்டுபாளையம் ஒரு க்ரைம் ஹிஸ்டர். ஏசியாவிலே இது இரண்டாவது க்ரைம். எந்த போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டும் கண்டு பிடிக்க முடியல. இதில் முக்கியமான விசயம் என்னன்னா எத்தனையோ க்ரைம் படம் பார்த்திருப்பீங்க. நிச்சயமாக நான் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன். இதுபோல் ஒரு படத்தை க்ரைம் படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு டிபரெண்டான எக்ஸ்
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் க
நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல், தன்னிடமுள்ளதை பிறருக்கு வழங்கி வாழும் வள்ளலாக வாழ்ந்தவர் என்.எஸ்.கே. அவருக்கு இப்படியொரு பிரமிப்பான விழாவை நடத்துவது உண்மையிலே மகிழ்ச்சியாக உள்ளது.கிட்டத்தட்ட 108- நகைச்சுவை கலைஞர்களுக்கு பரிசளித்து நகைச்சுவை கலைஞர்களை ஒரே இடத்தில் சங்கமிக்க வைத்தது ஆச்சர்யமாக உள்ளது. பி.டி.செல்வகுமாரின் அன்புக்கு கட்டுப்பட்டு கலந்து கொண்டேன். இந்த விழாவில் கலந்து கொண்டமைக்காக நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைகிறேன் .நான் இயக்குனராக வரும்போது புதுமைப்பெண் படத்தின் கதையை மு
நடிகர் பாக்யராஜ் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து, டிசம்பர் 2ஆம் தேதி ஆஜராக மகளிர் ஆணைய தலைவி கண்ணகி சம்மன் அனுப்பி உள்ளார்.சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட பாக்யராஜ் பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து பாக்யராஜ் பேசியதற்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து விசாரணை செய்ய சம்மன் அனுப்பி உள்ளது.
விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர்,ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி அடுத்ததாக திரில் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு போன்ற படங்களில் நடித்த பிந்து மாதவி நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது.