ஸ்பெயின்:
முறையாகவே பிசினஸ் செய்கிறோம். எவ்வித தில்லுமுல்லுகளும் இல்லை என்று தங்கள் நிறுவனத்தில் போலீசார் மேற்கொண்ட ஆய்விற்கு பிறகு கூகுள் தன்னிலை விளக்கம் தெரிவித்துள்ளது. 


ஸ்பெயின் நாட்டில் கூகுள் செய்துவரும் தொழில்களில் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது என்ற புகார்கள் தொடர்ந்தன. இதனால் மாட்ரிக் நகரில் கூகுள் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 


இதையடுத்துதான் கூகுள் இந்த தகவலை சொல்லியுள்ளது. விஷயம் என்னன்னா?  அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளின் சட்டங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு குறைந்த அளவிலான வரியையே கட்டிவருவதாக அரசியல்வாதிகளும், பொதுமக்களும் தொடர்ந்து புகார் மீது புகாராக தெரிவித்தனர்.


இதையடுத்து மாட்ரிட் நகரில் உள்ள அந்நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றனர்.


போலீசாரின் ஆய்விற்கு பிறகு நிருபர்களைச் சந்தித்த கூகுள் நிறுவன செய்தித் தொடர்பு அதிகாரி, எந்த வரி ஏய்ப்பிலும் கூகுள் நிறுவனம் ஈடுபடவில்லை. விசாரணை அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் முறையான பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். உண்மையாக இருந்தால் உண்மையிலேயே சந்தோஷம்தான்.


మరింత సమాచారం తెలుసుకోండి: