வாஷிங்டன்:


ஜெர்மனி நிறுவனம் அமெரிக்காவில் கால் பதிக்குது... அதுவும் பிரபலமான விதை விற்பனை நிறுவனத்தை வாங்கிக்கொண்டு என்று தகவல்கள் பரபரக்கின்றன.


ஜெர்மனியை சேர்ந்த பேயர் நிறுவனம்தான் தற்போது அமெரிக்காவில் காலடி பதிக்கிறதாம். இந்த நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி விதை விற்பனை நிறுவனமான மான்சான்டோவை ரூ.4.41 லட்சம் கோடிக்கு வாங்க இருக்கிறதாம்.


அமெரிக்காவைச் சேர்ந்த மரபணு மாற்ற விதை உற்பத்தி நிறுவனம்தான் மான்சான்டோ நிறுவனம். இதை வாங்கதான் ஜெர்மனி பேயர் ஏஜி நிறுவனம் முன்வந்துள்ளது.


இதுகுறித்து பலகட்டமாக நடந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதி பெற்றுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக 66 பில்லியன் டாலர்கள் (அதாவது ரூ.4.41 லட்சம் கோடி) விலைக்கு வாங்க பேயர் நிறுவனம் ஒப்புதல் தெரிவிச்சிடுச்சாம்.


உலக அளவில் நடக்கும் மிகப்பெரிய விற்பனை நடவடிக்கை இதுதான் என்று சொல்றாங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: