உலகநாயகன் கமல் ஹாசனின் மகளாக 'பாபநாசம்' திரைப்படத்தில் நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் பல மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவரை பற்றி நாம் அறிந்திராத 10 விஷயங்களை இன்றைக்கு பார்க்கலாம்.


1. நிவேதா தாமஸுக்கு சொந்த ஊர் கேரளா. அவர் வளர்ந்தது சென்னையில் தான். தற்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், கட்டட கலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார்.


2. இவர் தனது 8-வது வயதில், குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படம் 'உத்தாரா'-வில் நடித்துள்ளார். 


3. படிப்பில் சிறந்த மாணவியாக விளங்கினாலும், இவர் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜேஸ்வரி, மை டியர் பூதம், சிவமயம் உள்ளிட்ட நாடகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


4. 'வெறுத்தே ஒரு பார்யா' திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் 13-ம் வயதிலே, கேரளா ஸ்டேட் விருது வென்றுள்ளார். 


5. நிவேதா சாப்பாட்டு பிரியையாகும். இவர் எல்லா வகை உணவுகளையம் விரும்பி, சுவைத்து சாப்பிடுவார். 


6. அவர் திரைத்துறைக்கு வரவில்லை என்றால்,  டீச்சர் ஆகியிருப்பாராம். இதுவே அவரது லட்சியமாம். 


7. அவருக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா..  நமது உலகநாயகன் கமல் ஹாசன் தான். இவரது மகளாக 'பாபநாசம்' திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


8. நிவேதாவிற்கு, பப் மற்றும் க்ளப் போன்ற விருந்து நிகழ்ச்சிக்கு போவதை விட, கடற்கரையில் நடக்கும் பார்ட்டிகளில் கலந்துக் கொள்ள தான் பிடிக்குமாம்.


9. இவர் தற்போது கிளாமர் இல்லாத நல்ல கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறார். 


10. அவருடைய உலகம், படிப்பு, சினிமா, குடும்பம், வீடு இது தான். 



మరింత సమాచారం తెలుసుకోండి: