கர்நாடகா:
எங்கள் பிழைப்பை கெடுக்கிறார் என்பதால்தான் ரஜினியை எதிர்க்கிறோம் என்று ரஜினிக்கு எதிராக வாய்ஸ் விட்டுள்ளன சில அமைப்புகள்.


கடந்த 22ம் தேதி வெளியான கபாலி படம் கர்நாடகாவில் சுமார் 300 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. வசூலில் இந்த படம் சக்கைப்போடு போடுகிறதாம். இந்நிலையில் இப்படத்தை கர்நாடகாவில் திரையிடப்பட்டதை எதிர்த்து "ரஜினி ஒழிக" என்ற கோஷத்துடன் சில அமைப்புகள் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


இதுகுறித்து அந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறும்போது,  ரஜினி கர்நாடகாவில் பிறந்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார். இங்கு 300 திரையரங்கில் கபாலி படம் வெளியிடுவதால் கன்னட சினிமாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதான் போராட்டம் செய்கிறோம் என்றனர். 


ஆனால் இந்த படத்தால் பலரும் பயன் அடைந்து வரும் நிலையில் தங்கள் அமைப்புகளுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளவே இப்படி ஒரு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். மற்றபடி இவர்களுக்கு கன்னட சினிமா மீது எவ்வித அக்கறையும் இல்லை என்று அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். என்னமோ போங்க... கபாலியை வைச்சு இவங்க விளம்பரம் தேடிக்கிறாங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: