'24' திரைப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் 'சிங்கம் 3' வெளிவரவுள்ளது. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 


இதையடுத்து அவர் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்குகிறது. 'நானும் ரவுடி தான்' இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கவுள்ளார். 


ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வந்துள்ளன. 


இதில் நடிக்கவுள்ள கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: