இதுவரையில் கவர்ச்சி நாயகியாக இடுப்பழகை காட்டியும், முன்னழகை காட்டியுமே காலத்தை ஓட்டி வந்த கட்டழகி காஜல் அகர்வால், சென்ற ஆண்டு முதல் தனது கதாபாத்திரத்திற்கு வலுவுள்ள திரைக்கதை கொண்ட படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். 


Image result for kajal apherald


சென்ற ஆண்டு ராணா ஜோடியாக நடித்த நேனே ராஜு நேனே மந்திரி, தல அஜீத் ஜோடியாக நடித்த விவேகம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான தெலுங்கு படமான நாணி தயாரித்த ஆவ் போன்ற படங்களில் ,தனது நடிப்பால் முத்திரை பதித்தார் காஜல் அகர்வால். மறுபடியும் கவர்ச்சி குத்தாட்டம் போட ரவி தேஜாவின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதும், அதை நிராகரித்தார் காஜல். 


Image result for kajal apherald


இந்நிலையில் ,முழுக்க முழுக்க காஜலின் வேடத்தையே சுற்றி நகரும் விதமாக வரவுள்ளது பாரிஸ் பாரிஸ் படம். கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் இப்படம் 2014இல் வெளியான பாலிவுட் படமான, கங்கனா ரணாவத் நடித்த குயின் படத்தின் ரீமேக் ஆகும்.

Image result for kajal apherald



இப்படத்தில் காஜல், சிறு ஊரில் இருந்து வெளிநாடு சென்று அனுபவங்கள் பெரும் ஒரு அப்பாவி பெண்ணாக நடித்துள்ளார். முதன்முறையாக தன்னை சுற்றியே நடக்கும் ஒரு படத்தில் நடித்துள்ள சவாலான அனுபவத்தை பெற்றுள்ள காஜல், இப்படம் வெற்றி பெற வேண்டுமே என்ற பதற்றத்தில் உள்ளார். பாரிஸ் பாரிஸ் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: