நடிகை காஜல் அகர்வால், இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பாரிஸ் பாரிஸ், தெலுங்கில் சில படங்கள் என நடித்து வரும் காஜல், தற்பொழுது ஒரு பெரிய படத்தை குறி வைத்து காத்து கொண்டிருக்கிறார். 


Image result for kajal aggarwal maatraan


கே. வி. ஆனந்த இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த படம் தான் அது. ஆனந்தின் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக ஏற்கனவே மாற்றான் படத்தில் காஜல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் முப்பத்தி ஏழாவது திரைப்படமான இப்படம், சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் தற்பொழுது நடித்து கொண்டிருக்கும் என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Related image


லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற வேண்டி, சூர்யா மற்றும் ஆனந்திற்கு பல வழிகளில் தூது அனுப்பி வருகிறாராம் காஜல் அகர்வால். சூர்யாவுடன் மோகன்லால் இனைந்து நடிக்கும் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை, காஜல் பெறுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: