நடிகர் ஆர்யா ராஜா ராணி படத்திற்கு பிறகு ஒரு ஹிட் கூட கொடுக்கவில்லை. மீகாமன் ,கடம்பன் என அடுத்தடுத்து பிளாப் படங்களாக தான் நடித்து வருகிறார். ரீமேக் ஆவது கைகொடுக்குமா என்று பலே பலே மகாடிவை தெலுங்கு படத்தை ரீமேக் செய்து கஜினிகாந்த் என்று நடித்தார்.



அந்த படமும் படு பிளாப் ஆனது. இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த படம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ கிறீன் தயாரிக்க உள்ளனர். மகாமுனி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அருள்நிதியை வைத்து மௌனகுரு என்ற படத்தை இயக்கிய சாந்தகுமார் ரீ என்ட்ரி கொடுத்து இயக்க உள்ளார்.



இந்த படத்தில் நாயகிகளாக சாட்டை மற்றும் குற்றம் இருபத்தி மூன்று படங்களின் நாயகி மஹிமா நம்பியாரும் மேயாத மான் புகழ் இந்துஜாவும் நடிக்க உள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: