நடிகை சாய் பல்லவி 2015 இல்   ரிலீசான மலையாள படமான ப்ரேமம் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.  மலர் மிஸ் என்று தென்னகமே கொண்டாடும் அளவுக்கு பிரபலமானார் சாய் பல்லவி. இந்த படத்தை அடுத்ததாக துல்கர் ஜோடியாக களி படத்தில் நடித்தார்.

Image result for sai pallavi apherald

இதன் பின்னர் தெலுங்கு திரை உலகில் அறிமுகம் ஆனார்.அங்கும் அடுத்ததடுத்து வெற்றிகளை குவித்தார். முதல் படமான பிடா படம் பிளாக்பஸ்டர் ஆனது. இதனை தொடர்ந்து நாணி ஜோடியாக நடித்த மிடில் க்ளாஸ் அப்பாயி படமும் சூப்பர்ஹிட் ஆனது. இடையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்த தியா படம் மட்டும் சொதப்ப, அடுத்ததாக டிசம்பர் 21 ஆம் தேதி அதிரடியாக அடிக்க உள்ளார்.

Image result for sai pallavi apherald

தெலுங்கில் இவர் நடிப்பில் சர்வானந்த் ஜோடியாக இயக்குனர் ஹனு ராக்வபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள படி படி லெச்சே மனசு படமும் தமிழில் தனுஷ் ஜோடியாக பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாரி 2   படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. முதல் தமிழ் படம் தோல்வி அடைந்தது என்பதால் பார்க்கலாம், இந்த டிசம்பர் 21 ஆம் தேதி இரட்டை வெற்றி பெறுவாரா சாய் பல்லவி என்று. 


మరింత సమాచారం తెలుసుకోండి: