இளம் இசையமைப்பாளர் அனிருத் குறுகிய காலத்துக்குளேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஆகிவிட்டார். தனுஷால் மூணு படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர், அடுத்ததாக கடகடவென வளர்ந்து சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் படங்களை தாண்டி தல அஜித்துடன் வேதாளம் மற்றும் விவேகம், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் என பல பெரிய நடிகர்களின் படத்திற்கு இசையமைத்து விட்டார்.

Image result for anirudh

ஆனந்த அதிர்ச்சியாக கார்த்திக் சுப்பாராஜ் வழக்கமாக பணியாற்றும் சந்தோஷ் நாராயணனை விட்டுவிட்டு பேட்ட படத்திற்கு அனிருத்தை புக் செய்தார். சூப்பர்ஸ்டாரார் ரஜினிகாந்தின் பேட்ட பாடல்களும் ஹிட்.

Image result for anirudh

இந்நிலையில் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன் 2  படத்திற்கும் தான் தான் இசையமைக்க உள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அனிருத் போட்டு உடைத்துள்ளார்.  


మరింత సమాచారం తెలుసుకోండి: