தல அஜித் அடுத்ததாக விஸ்வாசம் படத்தை தொடர்ந்து ஹிந்தி ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க தீரன் அதிகாரம் ஒன்று புகழ் ஹெச்.வினோத் இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படம் பூஜை போட்டு தொடங்க பட்டது.

Image result for ajith pink

தந்தி டிவி புகழ் ரங்கராஜ் பாண்டே இந்த படத்தில் வக்கீலாக ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். மலையாள க்யூட் நடிகை நஸ்ரியா நசீம் நேரம், நையாண்டி, ராஜ ராணி படங்களை அடுத்து பிங்க் ரீமேக் மூலமாக தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பார் என்று கிசு கிசுக்க படுகிறது.

Image result for ajith pink

இந்நிலையில் இந்த படத்தில் தலயின் வில்லனாக நடிக்க திரிஷா இல்லனா நயன்தாரா  மற்றும் அன்பானவன் அசரதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. பார்க்கலாம் அஜித்தின் வில்லனாவாரா ஆதிக் என்று. 


మరింత సమాచారం తెలుసుకోండి: