நடிகர் கமல்ஹாசன் கடைசியாக விஸ்வரூபம்  2  படத்தில் நடித்தார். இந்த ஆண்டு வேறு எந்த படத்திலும் நடிக்காத அவர், விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் இரண்டில் தோன்றினார். இதனை அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் அவர் இணைந்த 1996 இல் வெளியான பிளாக்பஸ்டர் படமான இந்தியன் படத்தின் சீக்வலாக இந்தியன் 2  படத்தை அறிவித்தார்.



இந்த படம் டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல் தனது மக்கள் நீதி மையம் கட்சி பணிகளில் உள்ளதால் சிறிது அவகாசம் கேட்டதாகவும், அதே நேரத்தில் காஜலும் இந்தியன் படத்துக்காக களரி கற்றுக்கொண்டுள்ளதால் படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் தான் தொடங்குமாம்.



அனிருத் இசையமைப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ள இந்தியன் 2 , 2019 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: