தல அஜித் கடைசியாக தமிழில் விவேகம் படத்தில் அதிரடி நாயகனாக நடித்தார். இதனை தொடர்ந்து இவர் நடித்து வரும் படம் தான் விஸ்வாசம். அதே சிறுத்தை சிவா இபக்கத்தில் நான்காவது முறையாக தல இணைய, விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனமே இந்த படத்தையும் தயாரித்து வழங்குகிறது.



இதில் தல ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நான்காவது முறையாக ஜோடி சேர்கிறார், பில்லா, ஆரம்பம், மற்றும் ஏகன் படங்களை தொடர்ந்து. மேலும் யோகி பாபு, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், கோவை சரளா என்று ஒரு பெரிய நகைச்சுவை பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. பொங்கல் அன்று வெளியாக உள்ள விஸ்வாசம் படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்தனர்.



விஸ்வாசம் ஒரு சிறப்பான குடும்ப படம் என்றும், பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்தோடு பார்க்க சரியான கொண்டாட்டமான படம் என்றும் புகழ்ந்து படத்திற்கு யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: