நடிகை வரலட்சுமி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரது அடுத்த படமான டேனியின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த படத்தில் இவர் காவல் துறை அதிகாரியாக நடிக்க இவருடன் இணைந்து பிங்கி என்ற நாய் நடிக்கிறது.

Image result for varalaxmi apherald

இருவரும் இணைந்து எப்படி கொலை குற்றங்களை தீர்க்கிறார்கள் என்பதே கதை. சந்தானமூர்த்தி என்ற அறிமுக இயக்குனர் எடுக்கும் இப்படத்தில் யோகி பாபு  மற்றும் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளனர்.

Image result for varalaxmi apherald

மேலும் வரலட்சுமியின் சமூக அக்கறையால் இந்த பட குழுவினர் அவருக்கு மக்கள் செல்வி என்ற பட்டத்தை வழங்கி உள்ளனர். ஏற்கனவே மக்கள் செல்வன் என்ற பட்டத்தை சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: