நடப்பதை பார்த்தால், ஆட்சிக் கவிழ்ப்பு நடக்குமோ,திமுக மெஜாரிட்டியை நிரூபித்து எடப்பாடி  ஆட்சியை கலைக்குமோ என்று சந்தேகம் வருகிறது.  சபாநாயகர் எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார், அதே நேரத்தில்  சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திமுக மனு கொடுக்கிறது.


இன்னொரு பக்கம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பேச்சும் இருக்கிறது.மே 23-க்கு பிறகு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று  முடிவு செய்துள்ள திமுக கிட்டத்தட்ட 10 அதிமுக எம்எல்ஏக்களிடம் விலை பேசி வருவதாகவும், அதில் 7 பேர் திமுக வர தயாராக உள்ளதாகவும்  கூறப்படுகிறது. 


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவங்களுக்கு 4 அதிமுக எம்எல்ஏ என்றால்  எங்களுக்கு 40 திமுக எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று அதிரடியாக கூறியுள்ளார். மேலும் எடப்பாடியார் நினைத்தால்  40 திமுக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் காசு பணம் வாங்காமலே வந்து விடுவார்கள்,  எங்க மேல கல்லெறிஞ்சா, அவர் மேல  எறிய நிறைய கற்கள் இருக்கு என்றார்  ராஜேந்திர பாலாஜி.


இத்தனை பேர் கட்சி தாவுவார்கள் என்று அமைச்சர் கூறுவதை நம்புவதா, நம்பாமல் இருப்பதா என்றே தெரியாத நிலைமையில்  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் கூட என்ன ஆகும் என்று தெரியாத நிலை தான் உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: